பிக் பாஸ் வீட்டை நாறடித்த வனிதா - மதுமிதா! சண்டைக்கு காரணம் என்ன?

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற டாபிக் காரணமாக பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டு வனிதாவும் மதுமிதாவும் நாறடித்தனர்.


பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஒன்பதாவது நாளில் மதுமிதாவிற்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது மதுமிதா தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கூறி வீட்டில் உள்ள அனைவரையும் மோட்டிவேட் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். இதனைத் தொடர்ந்து தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை மதுமிதா எடுத்துக் கூற ஆரம்பித்தார். திரையுலகிற்கு தான் வந்த புதிதில் யாருடனும் அதிகம் பேசுவதில்லை என்றும் எந்த விழாக்களிலும் பங்கேற்பது இல்லை என்றும் கூறினார். படத்தின் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட விழாக்களில் கூட தான் பங்கேற்பதில்லை என்று மதுமிதா தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட வனிதா இதுபோல் பேசுவது சரியில்லை மோட்டிவேட் செய்வதுபோல் பேசச் சொன்னால் நீ சினிமாவைப் பற்றி ஏன் பேசுகிறாய் என்று சண்டையை ஆரம்பித்தார். அதற்கு தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை தான்தான் கூறுவதாகக் கூறி தன்னை யாரும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யுமாறு கூறிய தில்லை என்றும் நானும் அப்படி இருந்தது இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தங்கள் வீட்டில் பெண்ணும் பெண்ணும் கூட கட்டிப் பிடிப்பது இல்லை என்று மதுமிதா கூற வனிதா டென்ஷனாகி விட்டார். சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசக்கூடாது உன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று வனிதா கூற பதிலுக்கு மதுமிதா நீங்கள் கூறுவது எல்லாம் கேட்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் ஆரம்பமான சண்டையை மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

பிறகு படுக்கை அறையில் வைத்து மீண்டும் மதுமிதா மனித இடையே மோதல் மூண்டது. நான் செய்வது தான் சரி நான் மட்டுமே சரியாக இருக்கிறேன் மற்றவர்கள் தவறாக இருக்கிறார்கள் என்று மதுமிதா கூறுவது hypocrisy என்று கூறி சண்டையை தீவிரப்படுத்தினார்கள் அளித்தார். வனிதா பேசிய பேச்சை கழுத்து மதுமிதா பதிலடி கொடுக்க அங்கிருந்து புறப்பட்டார். பிறகு வரவேற்பறையில் வைத்தும் மதுமிதா வனிதா இடையே சண்டை நடைபெற்றது. அப்போது வனிதாவுடன் சாக்சி சேர்ந்து கொண்டு மதுமிதாவை டென்சன் ஆக்கினார். இதனால் வெகுண்டெழுந்த மதுமிதா வனிதாவை ஒரு பிடி பிடித்தார்.

சமாளிக்க முடியாத வனிதா அங்கிருந்து புறப்பட்டார். சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது என்று கூற வந்த மதுமிதாவை தடுத்து நிறுத்த முயன்று மனிதா மூக்குடைபட்டார். ஒரு கட்டத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு உள்ளே வந்து கலாச்சாரத்தைப் பற்றி பேசலாமா என்று வனிதா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.