படு வேகத்தில் வேன் மீது மோதிய பைக் பற்றி எரிந்தது! 2 பேருக்கு உடல் கருகிய பயங்கரம்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பைக்கில் வந்தவர்கள் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்


தூத்துக்குடி, திருச்செந்தூரை சேர்ந்தவர் சாமிநாதன், இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் செல்ல புறப்பட்டு வண்டி புதுக்குடி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த வேன் மோதியது.

இதில் பைக்கில் தீப்பிடித்ததில் உடல் கருகி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரும் தற்போது பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். படுவேகத்தில் பைக் சென்றதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.