வீட்டில் தனிமையில் இருந்த நாடக நடிகை எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறைந்த தாய்! தந்தை!

பனப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நாடக நடிகை ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பனப்பாக்கம் அடுத்த பாணாவரம் பகுதியில் உள்ள மேட்டுதெருவைச் சேர்ந்தவர் பிரியா 19 இவர் அதே பகுதியில் உள்ள நாடக குழுவில் சேர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இவரது தந்தை கோதண்டம் அதை பகுதியில் ஒரு இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார் அதற்கு உதவியாக தனது மனைவி சாந்தாவையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவார்.

இந்நிலையில் பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து பிரியா மாலை நேரம் வேலை முடித்துவிட்டு எப்போதும் கடைக்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வராததால் அவரது தாயார் நாடகத்தில் நடிக்க சென்றிருப்பார் என எண்ணியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரியா அறையின் கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கதவை தட்டி பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை உடனே அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு இருந்தவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரியா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதையடுத்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்