வைகோவுக்கு அவ்வளவு தான் மரியாதை! கார்த்திக் சிதம்பரம் தடாலடி! மதிமுகவினர் புலம்பல்!

சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வைகோவை மதிக்காமல் கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாக புகார் எழுந்தது.


சிவகங்கையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் வேட்பாளராக நிற்கிறார். இவரை ஆதரித்து இன்று வைகோ தேர்தல் பிரச்சாரத்துக்காக சிவகங்கை வந்தார். அரண்மனை வாசலில் தேர்தல் பிரசாரத்தை வைகோ மேற்கொண்டார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்துக்கு வைகோ வாக்கு கேட்டு அறிமுகப்படுத்தினார். வழக்கமாக தலைவர்கள் பிரச்சார மேடையில் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது வேட்பாளர் எழுந்து நின்று வணக்கம் தெரிவிப்பது மரபு.

ஆனால் வைகோ அறிமுகம் செய்த இரண்டு முறையும் தனது இருக்கையை விட்டு கார்த்தி சிதம்பரம் எழவே இல்லை.  இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு பொதுமக்களைப் பார்த்து வணங்கினார். இதனால் மதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

அதே சமயம் பிரச்சார கூட்டத்தில் இல்லாமல் காலியாக இருந்ததால் கூட்டத்தை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்பினார் வைகோ.