வைகோ தேச துரோகிதானாம்! தண்டனை கிடைச்சாச்சு! எம்.பி. ஆவதில் சிக்கலா?

இன்று அரசியல் பரபரப்பான சூழலில், 2009-ம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பதிவான தேச துரோக வழக்கு மீதான தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


அப்போது வைகோவுக்கு ஒராண்டு ஜெயில் தண்டனையும், ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டார். கடந்த 2009-ம் ஆண்டு, ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவரின் பேச்சு, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது தேச துரோக வழக்கு ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தினரால் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ மே 25-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறித்ததனை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை, உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவிருப்பதால், கைது நடவடிக்கையில் இருந்து வைகோ தப்பினார். ஓர் ஆண்டு மட்டுமே தண்டனை கிடைத்திருப்பதால் எம்.பி. பதவி ஏற்பதில் சிக்கல் இருக்காது என்று பலரும் கருத்து சொல்லப்பட்டு வரும் நிலையில், தேச துரோகி என்று உறுதியாகி இருப்பதால், எம்.பி. பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்று தெரியவில்லையே..!