டெல்லியில் வைகோ குடும்ப விசிட்! குதூகலம் எத்தனை நாட்களோ..?

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோ, ஒவ்வொரு தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதில் ஆர்வமாக இருக்கிறார்.


நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோ, ஒவ்வொரு தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதில் ஆர்வமாக இருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி நாடாளுமன்றத்தில் நுழையும் வைகோ அதீத சந்தோஷத்தில் இருக்கிறார்.

வைகோ பதவி ஏற்கக்கூடாது என்று போர்க்குரல் கொடுத்த சுப்பிரமணிய சாமி, கருப்பு பலூன் காட்டி விரட்டிய நரேந்திர மோடி போன்றவர்களைப் பார்த்து சமாதானக் கொடி காட்டிவிட்டார். அதோடு, தன்னுடைய குடும்பத்தினரையும் கூட்டிப் போய் ஒவ்வொரு தலைவரையும் அறிமுகம் செய்துவைக்கிறார்.

இன்று அவரது மகன் குடும்பத்தினருடன் அத்வானியை சந்தித்துப் பேசினார் வைகோ. இரண்டு பேரும் அந்தக் காலத்துக் கதையை விலாவாரியாகப் பேசினார்களாம். உங்கள் சேவை, நாட்டுக்கு சேவை என்று வைகோவை பாராட்டினாராம் அத்வானி. எல்லாம் சரிதான், இனிமே நாடாளுமன்றத்தில் எதிர்த்துதான் பேச வேண்டும் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா ஸ்டாலின்? அதுவரை குதூகலமாக இருந்துகொள்ளுங்கள்.