தி.மு.க. மெஜாரிட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால், 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் பிரசாந்த் கிஷோரின் திட்டம். இதனை ஆரம்பத்தில் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். ஆனால், வைகோ, திருமா உள்ளீட்ட கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்

அதனால், தன்னுடைய பிடியில் இருந்து கொஞ்சமாக இறங்கிவந்தார். தேர்தல் நேரத்தில் தொகுதிகள் குறித்துப் பேசலாம் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது தோற்கக்கூடிய தொகுதிகளை மட்டும் கூட்டணிக் கட்சிகள் தலையில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளாராம்
இந்த தகவல் தெரிந்ததும் மற்ற கட்சிகள் அமைதியாக இருந்தாலும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், வைகோவின் ம.தி.மு.க.வும் கடுமையாக கொந்தளிக்கின்றன.
திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அடுத்து எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி மதிமுக, விசிக தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ…?