மெட்டி ஒலி தனத்துக்கா இந்த நிலைமை? எப்டி இருந்தவங்க இப்டி ஆயிட்டாங்க! அதிர வைக்கும் காரணம்!

இயக்குனர் ராதாபாரதி இயக்கத்தில் தேவாவின் இசையில் பிரசாந்த் நடிகை காவேரி ஆகியோர் நடிக்க கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த படம் வைகாசி பொறந்தாச்சு.


இந்த படத்தில் நடித்த நடிகை காவேரி அப்போது பெரும் பிரபலம் பெற்றார். இவர் உண்மையில் கேரளாவில் பிறந்தவர். மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த இவர் 90களில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார்.

மலையாளத்தில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் கண்ணுக்குள் நிலவு பெண்ணின் மனதை தொட்டு,, சமுத்திரம் காசி போன்ற படங்களில் நடித்துள்ளார், காலம் செல்லச் செல்ல இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு குறைந்தது.

இதன் காரணமாக சின்னத்திரை பக்கம் திருப்பினார். கடந்த 2012ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி மெகா சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலில் நடித்து இருந்தார். மெட்டி ஒலியில் போஸ் மாமாவின் மனைவி தனம் என்றால் தெரயாதவர்கள் இருக்க முடியாது.

இந்நிலையில் இவர் தனது உடலை ஒல்லியாக குறைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வைகாசி பொறந்தாச்சு படத்தில் நடித்த காவேரியா இது என்னும் அளவிற்கு தனது உடம்பினை மிகவும் குறைத்துள்ளார் அவர். அதுமட்டும் அல்ல அதற்கான காரணத்தையும் தனம் வெளியிட்டுள்ளார்.

உடலில் அதிக எடை காரணமாக நடக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும், இதனால் உடலை தற்போது இளைத்து ஒல்லியாகியுள்ளதாகவும் காவேரி கூறியுள்ளார். மேலும் இதனால் தன்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.