தனியாத்தான் இருக்கேன் நீ வா..! ஆசை ஆசையாக சென்ற காதலனுக்கு காதலியால் ஏற்பட்ட பயங்கரம்! அதிர வைக்கும் சம்பவம்!

உத்தரப்பிரதேசத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த குடும்பம் ஒன்று இளைஞரை கொலை செய்து புதைத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் முன்னா என்பவர் வீட்டில் பங்கஜ்சிங் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். சட்டக் கல்லூரி மாணவரான இவர் அந்த வீட்டிலேயே இணையதளம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இதை வீட்டு உரிமையாளர் முன்னா கண்டித்ததால் அந்த வீட்டை காலி செய்து விட்ட வேறு ஒரு இடத்திற்கு குடித்தனம் சென்றார். முன்னா வீட்டில் குடித்தனம் இருந்தபோது முன்னாவின் மகளுக்கும் பங்கஜ்சிங்கிற்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதனால் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற பிறகும் இவர்கள் காதல் தொடர்ந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட முன்னா அதிர்ச்சி அடைந்து பங்கஜ்சிங்கை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதையடுத்து காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என மகளை மூளைச் சலவை செய்த முன்னா மகளை போன் செய்யச் சொல்லி அவரது காதலனை வீட்டிற்கு வரவழைத்தார். காதலியை நம்பி சென்ற பங்கஜ்சிங்கை முன்னா குடும்பம் சூழ்ந்து கொண்டது. பங்கஜ்சிங்கின் 2 கைகளையும் கட்டிக் கொடூரமாகக் கொலை செய்து குழியில் தள்ளி புதைத்துள்ளனர்.  

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பங்கஜைக் காணவில்லை என அவருடைய சகோதரர் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸ் நடத்திய விசாரணையில் முன்னா குடும்பம்தான் அவரை தீர்த்துக் கட்டியதை கண்டுபிடித்தனர். முன்னாவின் வீட்டில் நடந்தப்பட்ட சோதனையில், வீட்டின் பின் பகுதியில் இருந்த ஒரு குழியில் இருந்து பங்கஜின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து தலைமறைவான முன்னா மற்றும் அவருடைய குடும்பத்தினரை கைது செய்துள்ளனர்.