இது என்னோட பிள்ளை தரமாட்டேன்..! தாயை இழந்த நாய்க்குட்டிக்கு பாலூட்டி தாயான குரங்கு! நெகிழ வைக்கும் சம்பவம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் குரங்கு வளர்த்து வந்த நாய்க்குட்டியை வனத்துறையினர் பிரித்துவிட்டதால் பெரிய பாசப் போராட்டமே நடந்துள்ளது. குரங்கு செல்லமாக பராமரித்து வந்த நாய்க்குட்டியை ஈவுஇரக்கமின்றி பிரித்து விட்ட சோக சம்பவம் ஹரித்துவாரில் நடைபெற்றுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சாலையோரத்தில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று ஒரு 6 குட்டிகளை ஈன்றெடுத்தது. ஒரே சமயத்தில் 6 குட்டிகளை பெற்றுவிட்டதால் அவை அனைத்திற்கும் பால் குடுக்க முடியாமலும், பராமரிக்க முடியாமலும் தவித்து வந்தது. இந்நிலையில் அங்கிருந்த நல்லுள்ளம் படைத்த சிலர் அந்த தாய் நாயிடம் இருந்து குட்டிகளை பிரித்து வளர்ப்பதற்காக எடுத்து சென்றுவிட ஒரு குட்டி மட்டும் ஆதரவின்றி தவித்து வந்தது. 

தாயும் பிரிந்துவிட்டு சென்ற நிலையில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த அந்த நாயை பார்த்த தாயுள்ளம் படைத்த குரங்கு அந்த குட்டியை தத்தெடுத்துக் கொண்டது. கடந்த 3 நாட்களாக பால் கொடுத்து அந்த குட்டியை பராமரித்து வந்தது. அந்த நாயும் குரங்கை தன்னுடைய தாயாக ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் குரங்க தாவும்போது நாய்க்கு அடிப்பட வாய்ப்பு இருப்பதால் இருவரையும் பிரிக்க வனத்துறை முடிவு செய்தது. யார் கூப்பிட்டும் அவர்களிடம் செல்ல மறுத்தது நாய்க்குட்டி. கஷ்டப்பட்டு நாயை குரங்கிடம் இருந்து மீட்டு பெண் ஒருவரிடம் வளர்க்கச் சொல்லி ஒப்படைத்தனர் வனத்துறையினர்.