இனி காதலிப்பியாடா? தூணில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்து தோலை உரித்த போலீஸ்! காதலனுக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் விசாரணைக் கைதி ஒருவரை போலீசார் பெல்ட்டால் அடிக்கும்போது அவர் அலறித்துடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


குடும்பப்பிரச்சை காரணமாக மற்றொரு கிராமத்தில் இருந்து கான்பூர் நகரத்திற்கு ஒரு பெண் ஓடிவருகிறாள். அவருக்கு கான்பூரில் வசிக்கும் ஒரு நபர் உதவி செய்கிறார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அவர் மீது அளித்த புகாரில் கான்பூர் காவல்நிலைய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வருகின்றனர். 

பின்னர் அவரை விசாரணை என்ற பெயரில் பெல்ட்டால் கடுமையாக தாக்குகின்றனர். பாதிக்கப்பட்ட நபரை சுவரோடு அழுத்தி இரண்டு கைகளையும் இரண்டு பக்கம் காவல்துறையினர் பிடித்துக்கொள்ள முதுகில் பெல்ட்டைக் கொண்டும் குச்சியாலும் அடிக்கின்றனர். அந்த நபரை காவலர்கள் மாற்றி மாற்றி அடித்தபோது, அங்கிருந்த சக காவலர்கள், அவர் அலறித்துடித்த அந்த காட்சியை ரசித்து சிரித்தனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவும் செய்தனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காவலர்களின் இந்த அராஜக செயல் குறித்து அதிர்ச்சி தெரிவித்த மூத்த காவல்துறை அதிகாரி இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வடமாநிலங்களின் பல பகுதிகளில் காரணமே இன்றி விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை காவல் நிலையம் அழைத்து வந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அடிக்கடி வீடியோ பதிவுகளாக வெளிருவது குறிப்பிடத்தக்கது.