அந்த இடத்தில் கை வைத்தால் சுட்டுடும்..! கற்பழிப்பில் இருந்து பெண்களை காப்பாற்ற வந்தது ஆன்டி ரேப் கன்!

டெல்லி: யாரேனும் சம்பந்தம் இன்றி தொட்டால் உடனே சுடக்கூடிய தற்காப்பு துப்பாக்கியை உத்தரப் பிரதேச இளைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.


இந்தியா முழுக்க பெண்களுக்கு பல்வேறு வகையில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் முதல் வயதான பாட்டி வரை தனியே சுதந்திரமாக வாழ முடியாத அளவுக்கு, பாலியல் தொல்லைகள் தரப்படுவதால், பெண்களுக்கு உதவும் வகையில் உத்தரப் பிரதேச இளைஞர் ஷியாம் சவுராஸ்யா, புதிய தற்காப்பு கருவியை தயாரித்துள்ளார்.

ஆன்டி-ரேப் கன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த துப்பாக்கி பார்ப்பதற்கு ஒரு பர்ஸ் போல இருக்கும். இதில் ஒரு பொத்தான் வைக்கப்பட்டிருக்கும். ஆபத்து நேரத்தில், அதாவது அதனை வைத்திருக்கும் பெண்ணிடம் யாரேனும் பாலியல் தொந்தரவு செய்தால், உடனடியாக, அப்பெண் அந்த பொத்தானை அழுத்த வேண்டும். அதன்மூலமாக, அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு சிக்னல் அனுப்பப்படும்.

அத்துடன், மீண்டும் ஒருமுறை அதனை அழுத்தினால் துப்பாக்கி வெடிப்பது போல சத்தம் வரும். இதன்மூலமாக, அங்குள்ளவர்களின் கவனத்தை திசைதிருப்பி சம்பந்தப்பட்ட பெண் தப்பித்துவிடலாம் என, இதனை தயாரித்த ஷியாம் சவுராஸ்யா தெரிவித்துள்ளார்.  

இவர் ஏற்கனவே இந்திய ராணுவ வீரர்களுக்காக, இரும்பிலானா பாதுகாப்பு கவசத்தை கண்டறிந்ததற்காக பலரது பாராட்டுகளை பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.