மனைவி கொடூர கொலை..! கணவனை நடுரோட்டில் அடித்து, உதைத்து டார் டாராக பிய்த்து எடுத்த கிராம மக்கள்! அதிர வைக்கும் காரணம்!

டெல்லி: மனைவியை கொன்றதாகக் கூறி உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.


உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நஷீர் குரேஷி. 40 வயதான இவர், மனைவி  அஃப்சாரியை கோடாரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், இவரை கடந்த 2 நாளாக உள்ளூர் மக்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த குரேஷியை பொது மக்கள் சிலர் கண்டுபிடித்து, அவரை துரத்தி துரத்தி அடிக்க தொடங்கியுள்ளனர்.

மரக்கட்டைகள், இரும்புக் கம்பிகள், கற்களால் அவர்கள் அடித்ததில் நஷீர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பற்றி ஃபதேபுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.