உத்திரப்பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில், ஒரு லிட்டர் பாலில், ஒரு வாளி தண்ணீரை கலந்து கொடுத்துள்ள அவல நிலை அரங்கேறியுள்ளது.
ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர்! 85 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட பேரதிர்ச்சி! எங்கே தெரியுமா?
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் கோட்டா கிராமத்தில் அதிக அளவில் பழங்குடியினார்கள் வசிக்கும்பகுதிஆகும். இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளியில்படித்து வருகிறார்கள்.சோன்பத்ராவில் கோட்டா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு மதிய உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு பால் வழங்கப்படுவது வழக்கம். அந்த. வகையில், நேற்று முன்தினம், பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாலை பருகிய மாணவர்களுக்கு வெறும் தண்ணீராக இருந்துள்ளதால் புகார் தெரிவித்தார். மேலும், அதுகுறித்து புகார் எழுப்பட்டது.
இதற்கிடையில், இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் விசாரித்தபோது, ஒரு லிட்டர் பாலில், ஒரு வாளி தண்ணீரை கலந்து காய்ச்சி, 85 மாணவர்களுக்கு விநியோகித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின்அடிப்படையில் அரசு ஊழியர்கள் மீதுநடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்தார்கள் அரசு ஊழியர்கள்.