மஞ்சள் புடவையில் கவர்ச்சி காட்டிய பெண் தேர்தல் அதிகாரி! யார் தெரியுமா?

உத்திரபிரதேசத்தில் சினிமா நடிகை போன்று மஞ்சள் நிற புடவையில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குச்சாவடிக்கு நடந்து வந்த பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.


உத்தரபிரதேச மாநிலம் தியோரியா எனும் பகுதியில் வசித்து வருபவர் ரீனா திவேதி. 32 வயதான இவர் அம்மாநிலத்தின் பொதுப்பணித்துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் பொறுப்பில் இருந்து வருகிறார். ஜூன் 12ஆம் தேதி ஆறாம் கட்ட பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ பகுதியில் இவருக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இதனால் அன்று காலை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் மஞ்சள் நிற புடவையில் ரீனா வாக்குச்சாவடி நோக்கி நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோர் பகிர்ந்து படு வைரலாகியுள்ளனர். ட்விட்டர் தளத்தில் #WomeninYellowSaree என்ற ஹேஸ்டேக் மூலம் இவர் உள்ளாகியுள்ளதால் ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் தெரியும் அளவிற்கு பிரபலம் ஆகியுள்ளார்.

இது குறித்து பேசிய தேர்தல் அதிகாரி ரீனா கூறியதாவது, "எனக்கு தேர்தல் பணியை கொடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2014,  2017 ஆகிய இரண்டு முறையும் தேர்தல் பணியில் இருந்து உள்ளேன். அப்போதும் இதே போன்று தான் இயல்பான தோற்றத்தில் வருவேன்.

உணவுப் பழக்கங்களிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவதால் இந்த பொலிவான தோற்றத்தில் நான் இருக்க உதவுகிறது. எனது புகைப்படம் வைரல் ஆன பிறகு எனது மகன் அவரது நண்பர்களுடன் வீடியோ காலில் அது என் அம்மா தான் என கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது" என்றார்.