பேசியே மயக்கிய நஸீம்! நம்பி வயல்காட்டிற்குள் சென்ற இளம் பெண்! காத்திருந்த 2 பேர்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.


உத்தர பிரதேசம் தெற்க பகுதியில் 16 வயது சிறுமி கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முகமது நஸீம் என்ற இளைஞர் அந்த சிறுமியிடம் ஏதோ பேசி மூளைச் சலவை செய்து அடர்த்தியான வயற்காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். எதற்காக வயலுக்கு கூப்பிடுகிறார் என்று தெரியாமலேயே சிறுமியும் சென்றுள்ளார்.

அங்கிருந்து தன்னுடைய நண்பர்கள் முகமது சோட்கா, முகமது பத்கா 2 பேரையும் வருமாறு அழைத்துள்ளார் முகமது நஸீம். வயல்காட்டில் 3 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோவும் எடுத்து, இணைய தளத்திலும் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து சிறுமி தந்தை புகாரை போலீசார் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.  

இதனால் கோபம் அடைந்த ஊர்மக்கள் முகமது நஸீமை பிடித்து பிரம்பால் வெளுத்து வாங்கினர். இதில் முகமது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முகமது நஸீமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமி புகார் தந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.