கல்யாணம் ஆகாமலேயே கர்ப்பம்! YouTube உதவியுடன் குழந்தை பெற முயற்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

YouTube உதவியுடன் தனிமையில் குழந்தை பெற்றெடுக்க முயற்சி செய்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


உத்தரப் பிரதேச மாநிலம், பிலாந்த்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட இளம்பெண், 25 வயதானவர் ஆவார். பாஹ்ராய்ச் பகுதியை சேர்ந்த இந்த பெண், கடந்த 4 ஆண்டுகளாக, கோரக்பூரில் தங்கி, அரசுப் பணிகளுக்கு தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்தார். 

இந்நிலையில், திடீரென பிலாந்த்பூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். திருமணம் ஆகாத நிலையில், எதிர்பாராவிதமாக கர்ப்பம் தரித்த இளம்பெண், மற்றவர்களுக்கு தகவல் தெரியாமல் மறைக்கும் நோக்கில், இவ்வாறு செய்துள்ளார். ஆனால், பிரசவ வலி வந்தபோதும், மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல், YouTube உதவியுடன் தானே குழந்தையை பெற்றெடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், எதிர்பாராவிதமாக அவர் உயிரிழந்துவிட்டார். 

அவரது அறையில் இருந்து நிறைய ரத்தம் வழிந்தோடிய நிலையில், பக்கத்து அறையை சேர்ந்தவர்கள் இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து அறையின் உள்ளே சென்று பார்த்தபோது, இளம்பெண் மற்றும் அவரது குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எது எதுக்கெல்லாம் YouTube உதவியை பெற வேண்டும் என்று தெரியாமல் இந்த பெண்ணின் விபரீத முயற்சியால் அவர் மட்டும் அல்லாமல் அவர் வயிற்றில் உள்ள குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.