வெரி குட்! இந்தியாவை பாராட்டிய ஐநா! ஏன் தெரியுமா?

ஃபானி புயலின்போது, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது- ,


இது தொடர்பாக ஐ.நா பேரிடர் ஆபத்து குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஃபானி புயலின் நகர்வுகள் மிகச்சரியாக கணிக்கப்பட்டு, அது கரையை கடக்கும் பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

வெளியேற்றப்பட்டவர்கள் முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். புயல் கரையை கடந்தபோது, பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டது.   

புயலால் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்கிற இலக்கை, ஃபானி புயல் கரையை கடந்த போது, இந்தியா கிட்டத்தட்ட எட்டியுள்ளது.  சுமார் 11 லட்சம் பேரை 900 முகாம்களில் தங்க வைத்தது இந்தியா.

இதன் மூலம் ஃபானி புயலால் பெருமளவில் உயிரிழப்புகளை இந்தியா தவிர்த்துள்ளது. , இவ்வாறு தனது புகழாரத்தில் ஐநா கூறியுள்ளது.