அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

உணவு சாப்பிட்டதும் வெற்றிலை போடுவது நம் தமிழர் பாரம்பரியம். இதற்குக் காரணம் வெற்றிலையில் நிரம்பியிருக்கும் மருத்துவக் குணங்கள்தான்.


·         வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு கலந்து போட்டுக்கொண்டால் சாப்பிட்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகும். அத்துடன் சீக்கிரம் பசியைத் தூண்டவும் செய்யும்.

·         வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அத்துடன் கற்பூரம் சேர்த்து, பற்று போட்டால் தலைவலி விரைந்து குணமாகும்.

·         குடிக்கும் நீரில் வெற்றிலையை போட்டுக் குடித்துவந்தால், ஜீரண சக்திக்கு நல்லது. வயிற்றில் இருக்கும் அல்சர், வலிக்கும் இதனை பயன்படுத்தலாம்.