திடீரென மாயமான இரு அழகிய பெண்கள்! வாடகை வீட்டின் அலமாரிக்குள் சடலமாக கிடந்த பயங்கரம்! ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்!

உக்ரைனில் விடுமுறைக்கு வெளியூர் சென்ற பெண்களை கொடூரமான முறையில் கடத்தி, கொன்று பின்னர் அலமாரி ஒன்றிற்குள். பின்னர் அழுகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். இதனை கண்ட பெற்றொர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் Mariya Kaminina என்ற 19 வயது உடைய பெண்ணும், மற்றும் Evelina Lisenko என்ற 16 வயது உடைய பெண்ணும் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். இவர்கள் விடுமுறைக்காக வெளியூர் சென்று இருந்தன.  இந்நிலையில், இருவரும் திடீரென காணமல் போயி இருந்ததன. இதனை அடுத்து பெற்றோர்கள் பதற்றத்தில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது, விடுமுறைக்காக சென்றிருந்த அவர்கள் இருவரும் வாடகைக்கு எடுத்திருந்த அறையின் அலமாரியில், பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்த ஒரு மூட்டைக்குள் கட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . காவல்துறையினர் இவர்களின் உடலகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று சேர்த்து டேப்பினால் சுற்றிவைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களது கைகளில் கைவிலங்கும் போடப்பட்டிருந்தது. இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளன. மேலும், இருவரின் உடல் முழுவதும் கத்திக்குத்துக்காயங்களும் காணப்பட்டுள்ளன.

கொலையாளிகள் கொள்ளையடிப்பதற்காக அவர்களை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த புகாரில் தொடர்பு உடைய கொலையாளிகளை தேடி வருகிறார்கள் உக்ரைன் காவல்துறையினர். இரண்டு அழகிய மகள்களை தொலைத்த பெற்றோர்கள் மிகந்த சோகத்துடன் உள்ளனர். இந்த செய்து அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.