ஸ்டாலினை விமர்சித்த கமலுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த செமத்தனமான பதிலடி!

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கமலுக்கு உதயநிதி ஸ்டாலின் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.


சென்னையில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள கண்ணே கலைமானே படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. 

நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை தமன்னா, வடிவுகரசி, இயக்குனர் சீனு ராமசாமி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளரை சந்தித்த நடிகர் உதயநிதி ஸ்டாலினிடம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் குறித்து கமல் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த உதயநிதி, ஸ்டாலின் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது.

கமல் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் நீண்ட காலமாக கிராமத்திற்கு சென்று கிராமசபை கூட்டத்தை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். கமலை பார்த்து காப்பி அடிக்கவில்லை. இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார்.