கேப்டன் நல்லவர்! ஆனால் கமல்...! தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 50 வருடங்களாக அரசியல் குறித்து எதுவும் பேசாமல் நடிகர் கமல் என்ன தூங்கிக் கொண்டிருந்தாரா என்று ஸ்டாலின் மகன் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி பேசினார். திமுக அதிமுக குறித்து கமல் மிகக் கடுமையாக விமர்சிப்பது குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல் ஒரு சிறந்த நடிகர் அதற்கு மேல் அவர் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லை என்று அசால்டாக பதில் சொன்னார் உதயநிதி. மேலும் தற்போது அரசியலுக்கு வந்து விட்டு திமுகவும் சரி அதிமுகவும் சரி இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் கமல் கடந்த 50 வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்றும் அவரை விமர்சிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.