எடப்பாடிக்கு சென்று எடப்பாடி பழனிசாமிக்கு பகிரங்க சவால்! தெறிக்கவிடும் ஸ்டாலின் மகன் உதயநிதி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி கே சென்று அவருக்கு ஸ்டாலின் மகன் உதயநிதி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.


திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் ‌ அந்த வகையில் சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ் ஆர் பார்த்திபன் ஆதரித்து எடப்பாடியில் உதயநிதி என்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது முதலமைச்சர் பதவிக்கு வந்தபிறகு எடப்பாடி எனும் ஊருக்கு பழனிசாமி கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்து விட்டதாக உதயநிதி கூறினார். எனவே இனி எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி என்று கூறாமல் வெறும் பழனிசாமி என்று மட்டுமே தான் கூற உள்ளதாக உதயநிதி தெரிவித்தார். 

ஸ்டாலின் மகள் என்கிற தகுதியைத் தவிர எனக்கு வேறு எந்தத் தகுதியும் இல்லை என்று எடப்பாடி பேசி வருவதாக உதயநிதி கூறினார். கலைஞரின் பேரன் ஸ்டாலினின் மகன் என்பதெல்லாம் மிகப்பெரிய தகுதி என்று எடப்பாடிக்கு அப்போது உதயநிதி பதிலளித்தார்.

 தமிழகம் முழுவதும் உள்ள எந்த கிராமத்திற்கு வேண்டும் என்றாலும் தான் வர தயாராக இருப்பதாக உதயநிதி அப்போது கூறினார். அதே கிராமத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரலாம் அப்போது மக்கள் யாரை சந்தித்து தங்கள் குறைகளை கூறுகிறார்கள் என்று பார்க்கலாமா என உதயநிதி சவால் விடுத்தார்.

இந்த சவாலை முதலமைச்சர் இதில் கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.