உங்கள் வாயில் வேட்டு வைத்துள்ளது தேர்தல் முடிவு! ரஜினியை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்துப் பேசி உள்ளார்.


திருச்சி லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு பிரமாண்ட வெண்கல சிலையை திமுக தலைவர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஸ்டாலின் மகன் உதயநிதி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் இடம் கூட அதிக தொகுதிகளில் திமுக தான் வென்றுள்ளது.

இந்த உற்சாகம் சிறிதும் குறையாமல் உள்ளாட்சித் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும். இனி திமுகவிற்கு எப்போதுமே வெற்றி தான். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறிக் கொண்டு இருந்தனர். அவர்கள் வாயில் வேட்டு வைத்துள்ளது தேர்தல் முடிவுகள். இனி தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை.

தமிழக அரசியலின் ஒரே தலைவன் மு க ஸ்டாலின் மட்டும்தான். இவ்வாறு உதயநிதி பேசியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறியிருந்தார். அதனை மனதில் வைத்துக்கொண்டே உதயநிதி தற்போது பேசியுள்ளதாக சொல்கிறார்கள்.