சுயேட்சை வேட்பாளரை அடித்து உதைத்த உதயநிதி ஆதரவாளர்கள்!ஓட்டு கேட்டுச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

திண்டுக்கல்லில் சுயேட்சை வேட்பாளரை உதயநிதி ஆதரவாளர்கள் அடித்து உதைத்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் சுயேச்சை வேட்பாளரான அம்ரோஸ் வாக்கு சேகரித்தார். அதாவது நத்தம் பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திண்டுக்கல் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அம்ரோஸ்  அந்த இடத்தில் வாக்கு சேகரித்தார். இதற்கு அங்கிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுகவினருக்கும், அம்ரோஸுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுகவினர் அம்ரோசை அடித்து உதைத்து அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர். 

திமுகவினர் தன்னை  தாக்கியதாகவும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுயேட்சை வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார் அம்ரோஸை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.