இந்தத் தேர்தலில் எப்படியாவது தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட வேண்டும் என்று அன்புமணி எவ்வளவோ ஆசைப்பட்டார். ஆனால், அவரது அப்பா ராமதாஸ், புத்திசாலித்தனமாக அ.தி.மு.க.வில் சீட் வாங்கி, அவரது கனவை உடைத்துவிட்டார்.
ஒண்டிக்கு ஒண்டி வர்றேன்! அன்புமணி சவாலை ஏற்று கெத்து காட்டிய உதயநிதி!
அதன்பிறகு பொதுக்கூட்ட மேடைகளில் தி.மு.க.வை அத்தனை தூரம் வம்பிழுக்காமல் பட்டும் படாமலும் அன்புமணி சீண்டிவந்தார். ஆனால் ஸ்டாலின் ஆரம்பம் முதலே ராமதாஸ், அன்புமணியை கட்டி உரித்துக்கொண்டு இருந்தார்.
வலிக்காத மாதிரியே நடித்துக்கொண்டிருந்த அன்புமணி, தென்சென்னையில் ஜெயவர்த்தனை ஆதரித்துப் பேசியபோது, ஸ்டாலின் தி.மு.க.வில் நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார். தி.மு.க. காலத்தில் எந்த நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று ஆக்ரோஷமாகப் பேசியவர், இதுகுறித்து விவாதிக்க ஸ்டாலின் அல்லது அவர் மகன் உதயநிதி என்னுடன் வரத் தயாரா என்று கேட்டார்.
சமீபகாலமாக வாயில் சனி பகவான் வந்து உட்கார்ந்து இருப்பது அன்புமணிக்குத் தெரியவில்லை போலும். இந்த விஷயம் கேள்விப்பட்டு உதயநிதி ஸ்டாலின் குஷியாகிவிட்டார். உடனே அன்புமணியை மீட்டிங் ஏற்பாடு செய்யச் சொல்லுங்க. நான் ஒண்டிக்கு ஒண்டியா அவர்கூட விவாதிக்க ரெடியா இருக்கேன். முதல்ல எட்டு வழிச் சாலையில் இருந்து பஞ்சாயத்தை தொடங்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தகவல் இப்போது அன்புமணியிடம் தெரிவிக்கப்பட, அமைதியாக இருக்கிறார். ஏனென்றால் இப்போது விவாதம் செய்தால் டயர் நக்கியில்தான் தொடங்குவார் என்பதால் அமைதி காக்கிறார். அப்படியே காது கேட்காத மாதிரி நடிச்சிடுங்க அன்புமணி... இல்லைன்னா திரும்பவும் பிரஸ் மீட் மாதிரி தண்ணி குடிக்க வேண்டியதுதான்.