40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நாற்பதும் நமதே நாளையும் நமதே நாடும் நமதே என்ற நிலை உருவாகும். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் இமாலய வெற்றி உறுதி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
உதயநிதி சிவாஜி! தமிழச்சி சரோஜா தேவி! அமைச்சரின் செம ஹாட் பதிலடி!

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆட்சி தவறானவர்கள் கைகளில் சென்றுள்ளது என்ற ஸ்டாலினின் கருத்துக்கு பதிலளித்த அவர், 17 வருடங்களாக திமுகவுக்கு தவறான வகையில் வாக்களித்ததால் தான் தங்கள் குடும்பத்தை மட்டும் வளர்த்துக்கொண்டார்களே தவிற தமிழகம் முன்னேற வில்லை. வளர்ச்சியடையவில்லை.
தென் சென்னை வேட்பாளர் அழகாக இருக்கிறார் என உதயநிதி விமர்சித்தது புதிய பறவை படத்தில் வரும் சிவாஜி மற்றும் சரோஜா தேவியை தான் நியாபகம் படுத்துகிறது. சுவாரஸ்யமாக இருந்தது.
தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்ற தினகரனின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், தினகரனை பொறுத்தவரை கடலில் கரைத்த பெருங்காயம். அவரை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. கட்சியையும் ஆட்சியையும் பல முறை கவிழ்க்க முயன்று இறுதியில் தினகரன் தான் காணாமல் போக போகிறார். அவர் ஒரு டுபாக்கூர் பார்டி.
ஆர்.கே.நகரில் பொது கூட்டம் போட்டு அதிமுகவை விமர்சிக்க தயாரா? அவர் அப்படி சொல்லியிருந்தால் அவர் தைரியமானவர் என சொல்லலாம். அமமுக என்பது லெட்டர் பேட் கட்சி. காலப்போக்கில் அனைவரும் உணருவார்கள். வருபவர்களுக்கு பழைய மரியாதை நிச்சயம் இருக்கும். தேர்தலுக்கு பிறகு அமமுக நிச்சயம் இருக்காது.
ஜெயவர்தன் வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என பதிலளித்தார்.
இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.