உதயநிதி சினிமாவுக்கு முழுக்கு! அண்ணன், இனி முழு நேர அரசியல்வாதி!

இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு என்ன காரணம் என்று பட்டியல் போட்டால் மோடி எதிர்ப்பலை, ஆளும் கட்சியின் குளறுபடி, கூட்டணி பலம் என்றெல்லாம் பதில் சொன்னால் நீங்கள் நடுநிலையாளர்.


அதுவே தி.மு.க.வினராக இருந்தால் எப்படி சொல்வார்கள்? சந்தேகமே இல்லாமல் இந்த வெற்றிக்குக் காரணம் உதயநிதி மட்டும்தானாம். ஆம், ஸ்டாலின் தலைமையில் எத்தனையோ தேர்தல்களை சந்தித்திருக்கிறோம். அதனால் இந்தத் தேர்தலில்தான் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அப்படியென்றால், காரணம் ஒரே ஒருவர் அவர்தான் உதயநிதி என்று ஜிங்சாங் போட்டு பலரும் தலைமைக்கு கடிதம் எழுதி வருகிறார்களாம். தொண்டர்கள் எண்ணம் அறிந்து நடப்பதுதான் தி.மு.க.வின் ஜனநாயகம் என்பதால், தன்னுடைய மகனை முழுநேரமும் அரசியலில் இறக்கிவிட ஸ்டாலின் முடிவு செய்துவிட்டாராம். அதனால், இனிமேலும் சினிமாவில் நடிக்க வேண்டாம், தினமும் அறிவாலத்துக்கு வந்துசெல் என்று உத்தரவு போட்டிருக்கிறாராம்.

இந்தத் தகவலை தனக்கு வேண்டப்பட்டவர்களிடம், வேண்டாவெறுப்பாக சொல்லிக்கொள்கிறார் உதயநிதி. இப்படி சொல்வது உண்மைதானா என்று தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம். உதயநிதி முழுக்க முழுக்க கட்சிக்காரராக வரப்போவது உண்மைதான். ஆனால், காரணம்தான் வேறு என்கிறார்கள். ஆம், கடைசியாக உதயநிதி நடித்த மனிதன் படத்திற்குப் பிறகு அவருக்கு ஒரு படம்கூட உருப்படியாக ஓடவில்லை. ஒவ்வொரு படமும் கலெக்ஷனில் முந்தைய படங்களை தோற்கடிக்கும் வகையில் மோசமாக ஓடிவருகிறது. அதுவும், நிமிர், கண்ணே கலைமானே போன்ற படங்கள் மெகா தோல்வி. அதனால், இனியும் காசை காலி செய்யாமல் ஒழுங்கா உட்கார்ந்து குடும்பத் தொழிலைக் கவனி என்று சொல்லிவிட்டாராம்.
அப்பான்னா இப்படித்தான் இருக்கணும்.