உதயநிதிக்கு முதல்வர் ஆகும் யோகம் இல்லையாமே! இவரது யோகம் ஸ்டாலினுக்ககாவது உதவி செய்யுமா? பிரபல ஜோதிடர் சொல்றதைக் கேளுங்க!

ஜோதிடத்தைப் பார்த்துத்தான் உதயநிதியை அவசரம் அவசரமாக அரசியலில் இறக்கியதாக திமு.க.வில் பேசப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் உதயநிதி ஜாதகம் எப்படியிருக்கிறது, அது ஸ்டாலினுக்கு உதவி செய்யுமா என்று பிரபல ஜோதிடர் சூரியநாராயண மூர்த்தி கணித்துள்ளார். இதோ, அந்தக் கணிப்பு.

கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, அவரது மகன் உதயநிதி அரசியல் களத்தில் இறங்கியதுமே, தி மு க வின் இளைஞர் அணிக்கு செயலாளர் என்ற முக்கிய பதவிக்கு வந்து விட்டார். இவர் சினிமாவில் பெரிய ஸ்டார் அளவுக்கு உயரவில்லையென்றாலும் ஸ்டாலின் மகன் என்கிற ஒரு அடையாளம் மூலம் அரையலில் குதிக்க அதுவே போதுமாகிவிட்டது.

 தலைவன் என்பவனை யாராலும் உருவாக்க முடியாது பிறக்கும் போது தலைவனாகப் பிறக்க வேண்டும் அரசியலில் பொறுமை அமைதி மனத்துணிவு எளிமை சமயோகித புக்தி எதிர்காலம் அறிந்து எடுக்கும் முடிவுகள் அறிவால் சமர்த்திய முடிவுகள் சகிப்புதன்மை இவைகள் தலைவனை உருவாக்கும் தகுதிகள் என்றாலும்,

இவையாவும் ஒருவர்க்கு அமைய வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் தலைவனாக பிறக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் அந்த அம்சமான கிரகங்கள் இருக்க வேண்டும் உதயநிதி ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நிலையை பார்ப்போம்

உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 1977ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு மேஷ லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார். தற்போது குருமகா திசை முடிந்து சனி மகாதிசை தொடங்கி சுய புக்தி முடிந்து புதன் புக்திநடப்பில் உள்ளது. 

பொதுவாக மேஷ லக்னத்திற்கு சூரியன் குரு இருவரும் சுபர்கள் மட்டும் இன்றி போகக் காரர்கள் கூட . புதன். சுக்ரன் சனி ஆகியோர் பாவியாக இருக்கிறார்கள் இவரது ஜாதகத்தில் சந்திரன் உச்சம். சுக்ரன் ஆட்சி செவ்வாய் நீசம் குரு - புதன் சம பார்வையுடன் பரிவர்த்தனை செய்து இருக்கிறார்கள் குரு பார்வை சுக்ரன் - புதன் உள்ளது போல் சனி பார்வை சுக்ரன் சந்திரன் உள்ளது. லக்னம் முதல் தொடர்ச்சியாக ஓன்பது கட்டத்தில் கிரகங்கள் இருப்பதும் யோகம் தான்,

 ராஜாங்க கிரகமான சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கும் நிலைகளில் பார்க்கும் போது சூரியன் பகை நட்சத்திர பாதத்தில் நின்று 8ல் மறைவு செவ்வாய் பகை நட்சத்திர பாதத்தில் நின்று நீசம் பெற்ற நிலையில் உள்ளார். குரு பகை ராசியில் நின்று ராகு நட்சத்திர பாதத்தில் உள்ளார். சனி பகை ராசியில் நின்று கேது நட்சத்திரத்தில் உள்ளார்

இவைகளை பார்க்கும் போது பெரிய ளவில் தலைமை பொறுப்புக்கு ஏற்ற தகுந்தவராக தெரியவில்லை. கட்சி தொண்டவர்கள் கட்டி காத்து ஆளுமை திறன் சற்று குறைவு தான். இவரது தந்தை முதல்வர் பதவி அடைய முடியுமா என்பதில் இவரது ஜாதகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்

பொதுவாக மேஷ லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் தனுசு ராசியாக உள்ளது. இதன் அதிபதி குரு உள்ளார் தந்தை பற்றி பார்க்கும் போது சூரியனை கொண்டு பார்க்க வேண்டும் மேலும் தந்தையின் திறமை, பதவி ஆற்றல் திறன் Uற்றி பார்க்க குருவை கொண்டு பார்க்க வேண்டும் இவ்வாறு பார்க்கும் போது சூரியன் குரு அவ்வளவு சிறப்பு இல்லை ஸ்டாலின் ஒரு முறை மட்டுமே முதல்வர் பதவி கிடைக்கும் அந்த பதவி கூட இழுபறியான நிலையில் தான் கிடைக்கும் இவரது ஜாதகம் தந்தைக்கு உதவி செய்யாது நிலையில் தான் உள்ளது.

செவ்வாய் நீசம் என்பது ராஜ விசுவாசம் இல்லாமல் போய் விடும். ராஜதந்திரியான குரு அம்ச ராசியில் நீச ராசியில் இருப்பது சறுக்கல் தான். உச்ச சந்திரனை சூரியன் பார்ப்பது சனி பார்ப்பது பொது மக்களிடம் நம்பிக்கை உரியவர் என்கிற பெயர் எடுப்பதே சற்று சிரமம் தான் . குரு புதன் பரிவர்தனை யோகம் தொழிலுக்கு மட்டும் உதவியாக இருக்கும்.

ஆளுமை ராசியான மிதுனம் கடகம் சிம்மம் விருச்சகம. மீனம் இதில் ராசி லக்னம் அமைவது ஜன வசிய கிடைக்கும் இதில் இவர் மேஷம் லக்னம் ரிஷப ராசி என்று இருப்பது கூட சிறப்பு இல்லை. இதை விட தற்போது பாதக திசையான சனி திசை நடப்பில் உள்ளது. சிம்ம சனி பெரிய யோகத்தை தராது என்பது குறிப்பிட வேண்டும் .