உதயநிதி மட்டும்தான் தலைவனா? கொந்தளித்த கனிமொழிக்கு மூக்கறுத்த ஸ்டாலின்!

இப்போது தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர்கள் அத்தனை பேரும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்துவருகிறார்கள். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வைகோ தொடங்கி பல்வேறு கூட்டணிக் கட்சியினரும் பரப்புரை செய்துவருகிறார்கள்.


ஆனால், தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் நான்கு பக்கங்கள் கலரில் பிரசார படங்கள் தினமும் வெளிவருகின்றன. அதில் இரண்டு பக்கங்கள் முழுக்கமுழுக்க உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் படங்கள் மட்டுமே வருகின்றன. மற்ற இரண்டு பக்கங்களில் ஸ்டாலின் மேற்கொள்ளும் பிரசாரம் வருகின்றன.

மற்ற எந்த ஒரு தலைவரின் பிரசார படமும், வேட்பாளரின் படங்களும் வருவதே இல்லை. இதைக் கண்டு கட்சியின் மூத்த தலைவர்கள் தொடங்கி கீழ்மட்டத் தொண்டர்கள் வரை புலம்புகிறார்கள். கஷ்டப்பட்டு லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு தலைவரை வைத்து பரப்புரை செய்கிறோம், எங்களை மதிக்காவிட்டால் எப்படி என்று கொந்தளிக்கிறார்கள்.

ஆனால், இதுகுறித்து யாரும் வெளிப்படையாகப் பேசத்தயங்கும் நிலையில், கனிமொழி முதல் குரல் கொடுத்திருக்கிறாராம்.
முரசொலியில் நமது வேட்பாளர்கள் செய்யும் பிரசார படங்கள் எல்லாமே வரவேண்டும் என்று மூத்த தலைவர் மூலம் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தாராம். அதற்கு ஸ்டாலின் சொன்ன பதில் என்ன தெரியுமா?

முரசொலியில் உதயநிதிதான் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதனால் அவர் படத்தைப் போடுவதில் என்ன தப்பு என்று கேட்டாராம். தகவல் அறிந்து கொதித்துப் போயிருக்கிறார் கனிமொழி.