துரைமுருகன், பொன்முடிக்கும் பதவி பெற்றுத் தந்தது உதயநிதியா..?

தி.மு.க.வில் இப்போது எல்லாமே உதயநிதி என்றாகிப் போனது. அதையொட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன்.


திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரை மு.கஸ்டாலினும்,,உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து நியமனம் செய்ததாக அறிவித்து, நன்றி பாராட்டுகிறது போஸ்டர். உண்மையில் இவர்கள் இருவரும் முறைப்படி போட்டியிட நாமினேஷன் செய்து,போட்டியிட யாரும் முன்வராத நிலையில்,தேர்ந்தெடுக்கபட்டதாகத் தான் திமுகவே அறிவித்தது!

ஆனால்,இவர்களை ஸ்டாலினும்,உதயநிதியும் நியமித்தாக ஒரு விளம்பரம் கட்சியில் உள்ள ஒருவரால் தரப்பட்டிருக்கிறது என்றால்,திமுகவில் ஜனநாயக முறையிலான தேர்தலுக்கே வாய்ப்பில்லையோ…எல்லாமே நியமனம் தான் போலும்…! என்று தான் தோன்றுகிறது! 

விளம்பரம் வந்த பத்திரிக்கை, கட்சியின் எம்.பியான தயாநிதி மாறனின் தினகரன் இதழாகும்! மேலும், இந்த இரு பெருந்தலைமை பதவிகளும் கட்சியில் நீண்ட நெடிய அனுபவமுள்ள துரைமுருகனுக்கும்,பாலுவிற்கும் கிடைத்தற்கு உதயநிதியையும் சம்பந்தப்படுத்துகிறது! 

கட்சியின் மிக மூத்த தலைவர்களான இருவரும் உழைத்த காலகட்டத்தின் வயதைக் கூட பெற்றிராத உதயநிதி தான் இந்த இருவரும் பதவியை பெறுவதற்கே காரணம் என்று பகிங்கமாக அறிவிக்கும் இது போன்ற விளம்பரங்கள் போதாதா திமுகவின் இமேஜை டேமேஜ் செய்வதற்கு என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.