உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா..? கனிமொழியுடன் இப்படியா போட்டி போடுவது?

சாத்தான்குளம் விவகாரம் இத்தனை பெரிதாக உருமாறவும், வெற்றி அடையவும் முழு காரணம் என்று கனிமொழியைத்தான் ஏரியாக்காரர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அவர் இருக்கும் தைரியத்தில்தான் அத்தனை கட்சிக்காரர்களும் கடைசிவரை நின்று போராடினார்கள்.


அரசு அறிவித்ததைவிட கூடுதலாக பணம் தரவேண்டும் என்று தி.மு.க. சார்பில் 25 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தவரும் கனிமொழிதான். ஆனால், அவருக்கு எக்கச்சக்கமாக ஆதரவு பெருகுவதைக் கண்டு ஸ்டாலின் குரூப் சும்மா இருக்குமா?

உடனே உதயநிதியை சாத்தான்குளத்துக்கு ஆறுதல் சொல்ல அனுப்பிவிட்டார்கள். ஒரு கட்சிக்கு ஒருவர் ஆறுதல் சொன்னால் போதாதா? கனிமொழிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே வருவதா என்று தி.மு.க.வினரே கடுப்பாகிறார்கள்.

இந்த நேரத்தில், இ.பாஸ் எதுவும் அப்ளை செய்யாமல் இப்படி உதயநிதி திடீரென ஊர் சுற்றுவதை ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டத்தை மீறியதாக உதயநிதி மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளதாம்.

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?