சென்னையைக் கைப்பற்றிய உதயநிதி…! அப்செட் சேகர் பாபு.

ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகு, அவர் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியை தன்னுடைய ஆதரவாளருக்கு வாங்கிக் கொடுப்பதற்கு சேகர் பாபு எவ்வளவோ முயற்சி எடுத்துவந்தார். ஆனால், அவருக்கு பலமாக முட்டுக்கட்டை போட்டுவந்தார் உதயநிதி.


ஏனென்றால், சென்னையில் தனக்கு போதுமான அளவுக்கு வரவேற்பு இல்லை என்றும், அதற்கு மாவட்டச் செயலாளராக இளைஞரணியைச் சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும் என்றும் கருதினார். ஆனால், இதற்கு மூத்த நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வயது குறைந்த நிர்வாகியால் மாவட்டச் செயலாளர் பொறுப்பை வகிக்க முடியாது, தேவையில்லாத பிரச்னை வரும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதனால், இப்போதைக்கு மா.செ. பதவி யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தார் ஸ்டாலின்.

ஆனால், திடீரென இன்று, தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக இளைஞரணி மாவட்டப் பொறுப்பாளரான சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரம் அன்பழகனின் உழைப்பை கௌரவப்படுத்தும் வகையில் அவரது குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ராஜா அன்பழகன் இளைஞரணி அமைப்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

சிற்றரசுக்கு 40 வயது மட்டுமே ஆகும் நிலையில் மாவட்ட பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவர் எதிர்க்கட்சியை மட்டுமின்றி, தி.மு.க. உட்கட்சி பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பார்க்கலாம்.