கனிமொழிக்குப் போட்டியாக களம் இறங்கிய உதயநிதி..! அன்பில் மகேஸ் ஐடியாவா இது!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் மாணவர்களை அடித்து உதைத்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதற்கு தினமும் ஏராளமான தலைவர்கள் குவிந்து வருகிறார்கள். ஏனென்றால், இதுதான் இப்போது எதிர்க்கட்சிகளின் ட்ரெண்ட்.


தி.மு.க. சார்பில் ஏற்கெனவே திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் போய் பார்த்து ஆறுதல் சொல்லிவந்தார்கள். குறிப்பாக கனிமொழி அவர்களுக்கு ஆதரவாக பேசியது மட்டுமின்றி, கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து இருந்தார். இது வட இந்திய பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் ப்ளாஷ் ஆனது.

கனிமொழி இந்த விஷயத்தில் ஸ்கோர் செய்வதை அறிந்துகொண்டோ, என்னவோ இன்று தன்னுடைய அன்பு உடன்பிறப்பு நண்பர் மகேஸ் பொய்யாமொழியுடன் டெல்லியில் இறங்கிவிட்டார் உதயநிதி.

கனிமொழி ஸ்டைலில் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி, மீடியாக்களை கவர் செய்து அதன்பிறகு நட்பு வட்டாரத்துடன் டெல்லி ரவுண்ட்ஸ் போயிருக்கிறார் உதயநிதி. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று மாணவர்கள் திண்டாடிக்கிடக்க, அவர்களை வேடிக்கை பார்த்துவருகிறார்கள் தலைவர்கள்.