ஜூம் செயலியிடம் ராயல்டி கேட்கும் உதயநிதி..! எப்ப பார்த்தாலும் கட்டிங் ஞாபகம் தானா..?

தி.மு.க. என்றாலே கட்டிங் கட்சி என்பதுதான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதனை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துவது போன்று பேசியிருக்கிறார் உதயநிதி.


இன்று தி.மு.க. பொதுக்குழுவில் உதயநிதி பேசியபோது, ’’திமுக இளைஞரணியை பொதுச்செயலாளர் துரைமுருகன் மறந்துவிடக் கூடாது என்றும் பொதுச்செயலாளர் இடும் கட்டளையை ஏற்று செயல்பட திமுக இளைஞரணி எப்போதும் தயாராக உள்ளது.

ஜூம் செயலியை யார் கண்டுபிடித்தார்களோ அவர்கள் உண்மையிலேயே மு.க.ஸ்டாலினுக்கு தான் ராயல்டி தர வேண்டும் . அந்தளவிற்கு அந்த செயலி மூலம் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி ஆயிரக்கணக்கானவர்களுடன் பேசியுள்ளார். பொதுக்குழுவையே ஜூம் காலில் நடத்தியுள்ளார் முக ஸ்டாலின்.

இப்போது மாநிலத்தின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றது. இதனை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த இளைஞர் அணி தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார் உதயநிதி.