தி.மு.க. எம்.பி.க்கு நோஸ்கட் கொடுத்த நடிகர் பார்த்திபன். மன்னிப்பு கேட்ட உதயநிதி

நடிகர் பாத்திபனின் படத்துக்கு விருது வழங்கப்பட்டதையடுத்து, திமுக எம்.பி. செந்தில்குமார், ‘அண்ணனுக்கு பா.ஜ.க.வில் ஒரு சீட் பார்சல்’ என கிண்டலாக டுவிட் போட்டிருந்தார். இதைக் கண்டு ஆவேசமாகிவிட்டார் பார்த்திபன்.


Dr S செந்தில்குமார், ‘அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்’ என்று sweet-ஆக tweet-ட்டிருக்கிறார். செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்! தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால், நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. 

அதில்லொன்று ‘MP அண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரீகம். நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது. sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம். திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். 

சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா? என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப்படுத்தினால் மனம் வலிக்கும் என்று கதறக்கதறி விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த பஞ்சாயத்து பெரிதாகிவிடும் என்று நினைத்தோ என்னவோ, உதயநிதி இடையில் புகுந்து சமாதானம் செய்திருக்கிறார். ஆகவே, இப்போதைக்கு அமைதி காத்திருக்கிறார் பார்த்திபன்.