கருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் உதயநிதி..! உடன்பிறப்புகளே நெஞ்சை திடப்படுத்திக் கொள்ளுங்கள்!

நடிப்பு என்றால் உதயநிதிக்கு அல்வா சாப்பிடுவது போன்று. காதலிக்கும்போதும், சிரிக்கும்போதும், அழும்போதும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, அவரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துமுடித்துவிட்டார்.


இத்தனை சிறப்பான நடிப்புத் திறமை இருக்கும்போது, அடுத்தகட்ட முயற்சி எடுப்பது சகஜம்தானே. அதனால், தமிழக முன்னாள் முதல்வரும் உதயநிதியின் அருமை தாத்தாவுமான கருணாநிதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து, அதில் கருணாநிதியாக உதயநிதியே நடிக்கவும் இருக்கிறாராம்.

இந்தப் படத்தை இதுவரை உருப்படியாக ஒரு படமும் எடுக்காத இயக்குனர் ராம் சிவா இயக்குவதாக இருக்கிறாராம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

கருணாநிதி திரைப்படம் எடுக்கப்பட்டால், அதுதான் வசூலில் முதல் இடம் என்று சன் தொலைக்காட்சி கூவும். சிறந்த படத்துக்கான தேசிய விருதும், சிறந்த நடிப்புக்கான ஜனாதிபதி விருதும் கிடைக்கும். 

உடன்பிறப்புகள் இந்த அறிவிப்பினால் உற்சாகம் அடைந்திருப்பார்கள் என்பது மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.