முதல்வர் நாற்காலி காலி இல்லை..! ரஜினிக்கு உதயகுமார் நெத்தியடி!

கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார் ரஜினி. அப்போதே அவரது கருத்துக்கு அ.தி.மு.க.வில் இருந்தும் தி.மு.க.வில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இந்த நிலையில் துக்ளக் விழாவில் தேவையே எல்லாம் பெரியாரை வம்புக்கு இழுத்து, அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் ரஜினி. அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும் என்று ஸ்டாலின் வெளிப்படையாக சொன்னாலும், நாடு முழுவதும் கேஸ் போடுங்கள் என்று பெரியார் கும்பலுக்கு ஆதரவு கொடுத்துவருகிறார்.

நடக்காத சம்பவத்தை ரஜினி பேசவே கூடாது. தேவை இல்லாமல் எங்களுடைய பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரை சீண்டக்கூடாது என்று ஜெயக்குமார் எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்த நிலையில் இதுவரை ரஜினிக்கு புகழ் பாடிக்கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் உதயகுமார், காமராஜ் ஆகியோரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று பேசிய அமைச்சர் உதயகுமார், ‘ரஜினிகாந்த் அரசியல் ஆசையில் தமிழகத்தில் தர்பார் நடத்தலாம் என்று நினைக்கிறார். இங்கு முதல்வர் நாற்காலி காலி இல்லை’ என்று நெத்தியடி கொடுத்திருக்கிறார்.

அடுத்து யாருப்பா ரஜினியை திட்டப் போறது..?