திமுக மேடையில் ஸ்டாலின் மகன்! மருமகன்! ராகுலுக்கு பகிரங்க மிரட்டல்!

திருச்சியில், ‘இது எங்க குடும்ப விழா’ என்றுதான் உதயநிதி பேசத் தொடங்கினார். ஆம், சிலையாக நிற்கும் அன்பில் தர்மலிங்கம் மகேஷ் பொய்யாமொழிக்கு மட்டுமின்றி, எனக்கும் தாத்தாதான்


என்னுடைய தாத்தா கலைஞர், மகேஷ்க்கும் தாத்தாதான். ஏன், என் தாத்தா உங்கள் எல்லோருக்கும் தாத்தாதான். நாம் எல்லோரும் ஒரே குடும்பம் என்று பேசி எல்லோரையும் அலறவிட்டார் உதயநிதி.

உதயநிதிக்கு இளைஞர் அணி பதவி என்று எல்லோரையும் சொல்லவைத்து, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அது குறித்தும் உதயநிதி பேசினார். ‘எனக்கு கட்சியில் எந்தப் பதவியும் வேண்டாம். கட்சியின் கடைசி தொண்டன் என்றாலே போதும்’ என்று புல்லரிக்க வைத்தார். அதைக் கேட்டுகொண்டிருந்த அத்தனை பெருந்தலைகளுக்கும் வயிறு எரிந்தது. அதாவது அத்தனை தூரம் கட்சிக்கு தியாகம் செய்கிறாராம். அதை பொது மேடையில் பதிவும் செய்கிறாராம்.

இப்போது அறிவாலயத்திற்கு என்ன காரியத்துக்கு யார் போனாலும், சின்னவரை பார்த்துட்டு வாங்க என்று விரட்டுகிறார்கள். அங்கேயும் போய் அட்டனன்ஸ் போட வேண்டியது அவசியமாகிறது. பதவி இல்லாமலே இப்படின்னா என்று நிர்வாகிக:ள் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு அடுத்து காங்கிரஸ்க்கு உதயநிதி வைத்த வேண்டுகோள்தான் ஹைலைட். அதாவது பதவி ஆசையே இல்லாத தி.மு.க.வுக்கு நிறைய சீட் வேண்டுமாம். அதனால் அடுத்து உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நிறைய சீட் வேண்டும், விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ராகுலுக்கு அன்பு மிரட்டல் விடுத்தார். அதேபோன்று நியாயமே இல்லாமல் ஒரு கோரிக்கையும் வைத்தார். காங்கிரஸ் ஜெயித்து, வசந்தகுமார் ரிசைன் செய்திருக்கும் நாங்குநேரி தொகுதியும் தி.மு.க.வுக்கு வேண்டுமாம். உதயநிதி பேசுவதைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டுவதற்கு பிளான் போடுகிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

அதையடுத்து திருச்சி மீட்டிங்கில் நடந்த இன்னொரு நல்ல விஷயம் என்றால், சபரீசன் எல்லோருக்கும் காட்சி அளித்ததுதான். இதுவரை எல்லா இடங்களிலும் திரைமறைவு புள்ளியாக இயங்கிவந்த சபரீசன், திருச்சியில் எல்லோரையும் காலில் விழ வைக்காத குறையாக மிரள வைத்தார். 

ஸ்டாலின், உதயநிதியை மட்டும் பார்த்தது போதாதென்று திருச்சி புள்ளிகள் சபரீசனுக்கும் குனியவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படின்னா, சபரீசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் பார்சல் பண்ணுங்க உடன்பிறப்புகளே...