மக்கு முதலமைச்சர் எடப்பாடி! தெறிக்கவிடும் ஸ்டாலின் மகன் உதயநிதி!

பேசவே தெரியாமல் திருதிருவென விழித்த உதயநிதி இப்போது ஸ்டாலினைவிட பிச்சு உதறுகிறார் என்பதுதான் தி.மு.க.வினரிடையே இருக்கும் பேச்சு. அதனால்தானோ என்னவோ, இந்த நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இறக்கிவிட்டார்கள்.


இந்த முறை எடப்பாடியை செமயாக வாங்கியிருக்கிறார் உதயநிதி. சூலூரில் உதயநிதி என்ன பேசினார் என்று பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியிடம் உங்கள் சாதனை என்னவென்று கேட்டால், நான் இரண்டு வருஷமா முதலமைச்சரா இருக்கிறேன், அதுதான் சாதனைதான் என்கிறார். இவருக்கா மக்கள் ஓட்டு போட்டார்கள்?  இவர் முதல்வராக வேண்டுமென்றா மக்கள் ஓட்டு போட்டார்கள். இவருக்கு யாராவது ஓட்டு போடுவார்களா. அம்மா ஆட்சி... அம்மா ஆட்சி என்கிறார்களே... அம்மா எப்படி இறந்தார் என்று இவர்கள் சொன்னார்களா?

ஜெயலலிதா இறந்த பிறகு, நடந்த கூத்தெல்லாம் உங்களுக்குத் தெரியும். எடப்பாடி எப்படி முதலமைச்சரானார் என்பதும் உங்களுக்குத் தெரியும். பத்து மாதக் குழந்தை மாதிரி தவழ்ந்துபோய் சசிகலா காலைப்பிடிச்சு முதல்வரானவர் இவர். மே 19-ம் தேதி, இவரது ஆட்சியை அகற்றும் நாள். தலைவர் ஆட்சி வந்ததும் முதல் கையொப்பம் நீட் தேர்வு ரத்துக்காகத்தான். கல்விக்கடன், நெசவாளர் கடன் ரத்து செய்யப்படும் என்று ஏராளமான வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கும் நாங்கள், `செய்வதைத்தான் சொல்வோம். சொல்வதைத்தான் செய்வோம்.' விசைத்தறி தொழில் லாபகரமாக நடைபெற பாதுகாப்புக் குழு அமைக்கப்படும். தற்போதுள்ள மின் கட்டணம் வரைமுறை செய்யப்படும் ,

`நான் உரிமையோடு கேட்கிறேன், உங்கள் வீட்டுப்பிள்ளையாக கேட்கிறேன், உங்கள் தலைவருடைய மகனாக கேட்கிறேன். கலைஞரின் பேரனாக கேட்கிறேன்.. எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புங்கள். மக்கு முதலமைச்சர் தேவையா.. எடப்பாடிக்கு இந்த aமுதலமைச்சர் பதவி மோடி போட்ட பிச்சை.! நாம மோடியையே வீட்டுக்கு அனுப்பியாச்சு. இவரெல்லாம் எம்மாத்திரம்' 

``என்ன நான் சொல்றது. எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பலாமா?''  என்று மக்களைப் பார்த்துக்கேட்கஞ்  ``கூட்டத்திலிருந்து அனுப்பலாம்ஞ் அனுப்பலாம்’' என்ற கோரஸ் குரல்கள் ஒலிக்க நம்பிக்கையோடு கையை அசைத்தபடி அடுத்த ஸ்பாட்டுக்கு கிளம்புறார், உதயநிதி. துண்டு சீட்டு கூட இல்லாம பேசுறாருப்பா என்று உடன்பிறப்புகள் சந்தோஷப்படுவது நல்ல விஷயம்தான்.