டூ வீலரோடு தடுமாறி விழுந்த நபர்! நொடியில் ஏறி இறங்கிய பஸ் டயர்! திக்திக் நிமிடத்திற்கு பிறகு நேர்ந்த அதிசயம்!

கேரளாவில் நடந்த விபத்து ஒன்றில் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி நூலிழையில் தப்பிய நபரின் சிசிடிவி காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.


கேரளா கோழிக்கோடு மாவட்டத்தின் என்காப்புழா பகுதியில் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனம் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதை ஒட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தின் மேல் பகுதியில் சிக்கிக் கொண்டதால் பேருந்து சக்கரத்தில் அடியில் சிக்காமல் உயிர் தப்பி கொண்டார்.

நூலிழையில் உயிர் தப்பிய இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. இதைப் பார்த்து மனம் பதைபதைத்து விட்டதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.