பைக்கில் அதிவேகம்..! 1 நொடி தடுமாற்றம்! கன்னியாகுமரி போலீஸ்காரர் பலியான பரிதாபம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படையில் முதலாம் அணியில் பணிபுரிந்து வருகிறார் ஆயுதப் படை காவலர் காட்வின் தோனி. இவர் பணி நிமித்தமாக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் வாகனம் ஓட்டி செல்லும்போது தலைக்கவசம் அணியவில்லை என கூறப்படுகிறது.

காட்வின் தோனி காவல்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அப்போது எதிரே அரசப் பேருந்து ஒன்று கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்து எதிரில் வருவதை கவனிக்காமல் வேகமாக சென்றுள்ளார் காட்வின் தோனி. தக்கலை கொல்லன்விளை அருகே மோட்டார் சைக்கிளில் காட்வின் சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து வேகமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறி இருசக்கர வாகனமும் கீழே வீழ காட்வின் தோனி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமுற்ற காட்வின் தோனி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தக்கலை போலீசார் காட்வின் தோனி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை வழக்குப்பதிந்து பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.