கணவன், தம்பியுடன் டூவீலரில் ட்ரிபிள்ஸ்! திருமணமான 7 நாளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் திருமணமாகி 7 நாட்களே ஆன இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாதவச்சேரியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் செம்பாடகுறிச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி செல்வதற்கான பிரியதர்ஷினியின் தம்பி சந்தோஷ் மற்றும் கணவன் மனைவி இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியை நோக்கி சென்றனர்.

அப்போது அம்மன்நகர் பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பிரியதர்ஷினி சாலையின் நடுவில் விழுந்து கிடந்துள்ளார். பாலமுருகன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் ரோட்டின் ஓரத்தில் விழுந்துள்ளனர்.  

இந்நிலையில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று பிரியதர்ஷினியின் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மற்றும் அவரது தம்பி சந்தோஷ் மற்றும் அவரது கணவர் பாலமுருகன் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றும்

காயமடைந்த நபர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளதாகவும் யாரும் தலைக்கவசம் அணிய வில்லை எனவும் போக்குவரத்து விதிகளை மீறி வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டேங்கர் லாரி ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும் மற்றும் கட்டாயம் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.