சீமான் வெளிநாட்டுப் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டுகளை சொல்லி வியனரசு கட்சியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு டாக்டர் ஷாலினி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் சீமானின் முகத்திரை கிழித்தார்கள். தனசேகர் கெட்ட வார்த்தைகளால் பல்வேறு விவகாரங்களை வெளியே கொண்டுவந்தார். இப்போது நாமக்கல் ராஜ்குமார் ராஜா எழுப்பியிருக்கும் கேள்விகள் எல்லாமே செம.
சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள்! முன்னாள் தம்பியின் பகீர் பதிவு!

1. சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும் (அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையில் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரசாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ஃப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா?
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி வரும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாதித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள். என்று கூறியிருக்கும் ராஜ்குமார் மேலும் பல குற்றச்சாட்டுகளை தொடுத்திருக்கிறார்.
ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், "விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.
சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாவுக் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் புறக்கணித்தனர்.
கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்துதான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்?
இதுபோன்ற ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ராஜ்குமார், நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார்.
வழக்கம்போல் இதுவெல்லாம் தி.மு.க.வின் அடிப்பொடிகளின் வேலை என்று சீமானிடம் இருந்து பதில் வரும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.