தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் ரேஸ்! பயணிகள் உயிரோடு விளையாடிய ஆம்னி பேருந்துகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே இரு தனியார் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதி, விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.


திருச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த கே.பி.என் ஆம்னி பேருந்தினை தொடர்ந்து பின்னால் வந்த ரோஷன் டிராவல்ஸ் ஆம்னி பேருந்து, கே.பி.என் ஆம்னி பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் இரு பேருந்து டிரைவர்களும் முந்தி அடித்து கொண்டு பேருந்தை இயக்கியுள்ளனர்.இதில் வண்டி  மதுராந்தகம் அருகே வந்த போது, முன்னால் சென்ற கே.பி.என் பேருந்தை ரோஷன் ஆம்னி பேருந்து முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாரா விதமாக மோதி  விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு ஆம்னி பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்ததோடு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அச்சிறுபாக்கம் போலீசார் போக்குவரத்தை சரிசெய்து,இரு பேருந்து டிரைவர்களிடமும்  விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகளுக்கு அதிர்ஷ்ட வசமாக எந்த பாதிப்பும் இல்லை.

திடீர் விபத்தினால், அந்த பகுதியில் சிறிது நேரத்திற்க்கு போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு நிலவியது.