சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு! பொன்மாணிக்கவேல் கூறுவது யாரை? பகீர் ரிப்போர்ட்!

சிலை கடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறியிருப்பது தமிழக அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.


சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேல் விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணானாது. உச்சநீதிமன்றம் வரை சென்றும் பொன் மாணிக்கவேலை அசைக்க முடியவில்லை. ஓய்வு பெற்ற பிறகும் சிலை கடத்தல் வழக்கில் விசாரரணையை தீவிரமாக அவர் மேற்கொண்டு வருகிறார்.

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க விடாமல் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் முட்டுக்கட்டை போட்டதாக கடந்த வாரம் அதிரடியான புகாரை கூறி அனைவரையும் அதிர வைத்தார் பொன் மாணிக்கவேல். இந்த நிலையில் நேற்று உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த பதில் மனு நீதிபதிகளே ஒரு நிமிடம் ஸ்டன் ஆக்கியது.

அதாவது சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் நேற்று பொன் மாணிக்கவேல் கூறினார். இதனை கேட்ட நீதிபதிகள் அப்படி என்றால் யார் என்றும், அதற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்யுங்கள் என்றார்.

நிச்சயமாக என்று கூறிய பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் யார் என்றும் அவர்கள் எந்த அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஆனார்கள் என்பதையு விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்வதாக பொன் மாணிக்கவேல் கூறினார்.

இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் அதுவரை விசாரணையை ஒத்திவைத்தனர். இதனிடையே பொன் மாணிக்கவேல் கூறிய அமைச்சர்களில் இரண்டு பேரில் ஒருவர் வட மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்கள்.