பிச்சை எடுக்க வச்சிக்கோங்க..! பெற்ற குழந்தையை பிச்சைக்காரர்களிடம் வீசிவிட்டுச் சென்ற கொடூர தாய்!

டெல்லியில் பழமை வாய்ந்த கோயிலுக்கு ஆட்டோவில் வந்த 2 பெண்கள் குழந்தையை வீசிவிட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


டெல்லியில் பழமைவாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயில் வாசற்படி அருகே இருபுறமும் பிச்சைக்காரர்கள் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பது வழக்கம். 

அப்போது அந்த கோயிலை நோக்கி ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவில் இருந்து முகத்தை மூடியவாறு 2 பெண்கள் இறங்கி வந்தனர். அவர்கள் ஒரு கைக்குழந்தையையும் எடுத்து வந்தனர்.

அப்போது ஒரு பிச்சைக்காரர் அருகில் வந்த பெண் கையில் வைத்திருநத பிஞ்சுக் குழந்தையை அவரிடம் கொடுத்து விட்டு உடனடியாக அங்கிருந்து ஆட்டோவில் தப்பி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிச்சைக்காரர்கள் குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக் கொள் என்பது போல் வீசிவிட்டு சென்றார்களா என்ற யோசனையில் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை நலமுடன், ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத் பிறந்து 2 நாளே ஆன குழந்தையை பிச்சைக்காரர்களிடம் போட்டு விட்டு சென்ற அந்த 2 பெண்களையும் அவர்களை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரையும் வலை வீசி தேடிவருகின்றனர்.

ஒரு வேளை முறையற்ற உறவு காரணமாக பிறந்த குழந்தை என்பதால் சொந்த பந்தத்திற்கு சொல்ல முடியாத சூழ்நிலையில் சிசுவை வீசிவிட்டு சென்றனரா என தெரியவில்லை.