காஷ்மீரிகள் கண்ணீரை துடைக்கும் 2 பெண்கள்! களத்தில் இறங்கி நெகிழ வைக்கும் செயல்!

காஷ்மீரை இரண்டு துண்டாக்கி,அதன் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து அமித்ஷா வெளியிட்ட அறிவிப்புக்கு நான்கு நாள் முன்னால்தான் சையத் சஹ்ரிஷ் அஸ்த்தர் ஐ.ஏ.எஸ் காஷ்மீர் நிர்வாகத்தின் களவிளம்பரத் துறையில் பதவி ஏற்றிருக்கிறார்.


அஸ்தர் ஒரு டாக்டர்.மகன் பிறந்த ஒரு வருடத்திற்கு பிறகு ஐ.எ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்த பதவியில் அமர்ந்திருக்கிறார்.வளக்கமாக இந்தத் துறையில் இருக்கும் அதிகாரியின் வேலை,அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவிப்பது.அதை நடைமுறைப் படுத்தும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதும்தான்.

ஆனால்,இப்போது காஷ்மீர் மக்களின் கண்ணீர் துடைக்கும் வேலையில் பரபரப்பாக இருக்கிறார். காஷ்மீர் மக்களுக்கும் வெளி உலகுக்குமான தொடர்பை அரசு துண்டித்து விட்டதால் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்புறம் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கு நணபர்களுக்கும் என்ன நடந்தது,அல்லது தங்களது நிலை என்ன என்று தெரிவிக்க வழியில்லை.

அதற்கு இப்போது அவர்களுக்குள்ள ஒரே ஆறுதல் அஸ்தர்தான்.அந்தப் பணியை அவர் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார் என்று பாராட்டுகள் குவிகின்றன.மனிதனுக்கு வைத்தியம் பார்க்க வேண்டிய டாக்டர் அஸ்த்தர் இப்போது ஒரு மாநிலத்தின் நலம் பேனுகிறார்.

அடுத்த கதாநாயகி பி.கே நித்தியா ஐ.பி.எஸ். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவரானாலும் நித்யா பிறந்தது சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் என்கிற நகரில்.படித்தது பி.டெக் கெமிக்கல் இஞ்சீனியரிங்.பணியாற்றிய்ம்தோ ஒரு சிமெண்ட் கம்பெனியில். அந்தப் பணியில் இருந்தபோதுதான் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி 2016ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியானார்.

இப்போது நித்யா காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரின் மிகவும் சென்ஸ்டிவான பகுதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டிருக்கிறார்.தால் ஏரி,கவர்னர் மாளிகை,வீட்டுச் சிறையில் இருக்கும் அரசியல் பிரபலங்களின் வீடுகள் எல்லாமே நித்யாவின் நிர்வாகத்தில் உள்ள பகுதியில்தான் அமைந்துளன.

தான் பிறந்த சட்டீஸ்கர் மாநிலத்தின் மிக அமைதியான பகுதி,ஆனால்,எனக்கு இது போன்ற சவாலான வேலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்லும் நித்யாவுக்கு,இந்திமட்டும் அல்ல காஷ்மீரியும் பேசத்தெரியிம் என்பது கூடுதல் சிறப்பு.