ஒரே வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 2 அப்பாக்கள்! அம்பலமான பெண்ணின் கள்ளக்காதல்!

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணை, அவரது கணவரே சந்தேகப்பட்டு, தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஸியாமி நகரில், ஒரு பெண்ணுக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், அந்த குழந்தைகளில், ஒன்று அப்பா ஜாடையிலும், ஒன்று அம்மா ஜாடையிலும் இருந்துள்ளது. இதைப் பார்த்ததும், அந்த பெண்ணின் கணவர் கடுமையான சந்தேகம் அடைந்தார். இதையடுத்து, தனது குழந்தைகளுக்கும், தனக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்துள்ளார். 

அதில், ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே, அவருடன் ஒத்துப் போயுள்ளது. இதனால், 2வது குழந்தைக்கு அப்பா யார் எனக் கேட்டு, அவர் ரகளை செய்துள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவமனை டாக்டர்கள், அவரை அழைத்து, இது மருத்துவ விநோதம் எனக் கூறி, சமரசம் செய்துள்ளனர். ஆனால், அந்த நபர் மனம் அசையவில்லை.

தனது மனைவி, துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தனது ஜீனுடன் ஒத்துப் போகும் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு, மனைவியை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு நடையை கட்டியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இரட்டை குழந்தைகள் பிறந்தால், அவற்றின் டிஎன்ஏ பெரும்பாலும், அப்பாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போவது வழக்கம்தான். ஆனால், சில நேரங்களில் இந்த மாதிரி மருத்துவ விபரீதம் ஏற்பட்டு, ஏதேனும் ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே தந்தையுடன் ஒத்துப்போவதும் நிகழ்கிறது. இதற்கு சரியான காரணம் தெரியவில்லை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தனக்கு இருக்கும் கள்ளக்காதலன் குறித்த விவரத்தை அந்த பெண் வெளியிட்டார். இதன் மூலம் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கணவனும் மற்றொரு குழந்தைக்கு கள்ளக்காதலனும் தந்தை என்று அந்த பெண் கூறி அதிர வைத்தார்.