11 மாத குழந்தையின் தலையில் விழுந்த டிவி..! தாயின் கண்முன் நிகழ்ந்த பயங்கரம்! நடுவீட்டில் துயரம்!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 11 மாத குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வருபவர் வரலட்சுமி. இவரது 11 மாத குழந்தை மோகாரினி.  

புதன்கிழமை அன்று குழந்தைக்கு தாய் வரலட்சுமி உணவை ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது சாப்பிட மறுத்த குழந்தை, வீட்டின் உள்பகுதியில் அங்குமிங்கும் விளையாடிக்கொண்டிருந்தது.  

அப்போது தவறுதலாக டிவிக்கு செல்லும் கேபிளை பிடித்து குழந்தை இழுத்த போது, மேஜையில் இருந்த டிவி குழந்தையின் தலை மீது விழுந்ததில், படுகாயம் ஏற்பட்டது.  

இதைக்கண்ட வரலட்சுமி கதறியபடி அலறி அடித்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றார். குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இச்சம்பவம் அறிந்த உறவினர்களும் செய்வதறியாது மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.